கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிட்சைக்கு உயரிய விருது!

உலகலாவிய சிறந்த தலைமை பதவிக்கான விருது, கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிட்சைக்கு வழங்கப்பட உள்ளது. சுந்தர் பிட்சை கடந்த நான்கு வருடங்கள் முன்பு கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு பதவி ஏற்றார். அவர் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்டு வழி நடத்தினர்.  கூகுள் நிறுவனம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விளக்கம் அளித்தார். இது உலகம் முழுவதும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.
இந்நிலையில், 2019 ஆண்டுக்கான உலகலாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிட்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் அமெரிக்க பங்குசந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா-ப்ரைட் மேன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்களை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக தெரிகிறது.