பணிக்கு திரும்ப முடியாமல் தவித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி.!

ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருகை பதிவேட்டை பற்றி கவலையில் இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தங்களது பணி வருகை பதிவேட்டை பற்றி கவலைப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகமானது (The Department of Personnel & Training of the Ministry of Personnel, Public Grievances and Pensions)  ஜூலை 28 அன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த குறிப்பில் ஊரடங்கு காலத்தில் தங்களது பணிக்கு திரும்ப முடியாமல் தங்களது வருகைபதிவை பற்றி கவலைப்படும் ஊழியர்களுக்கு தெளிவான விளக்கம் தரும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து கிடைக்காமல் தனது உத்தியோகத்திற்கு செல்ல முடியாமல் இருந்த அரசு ஊழியர்கள் அவர்களின் நிலைமை குறித்து மேலதிகாரிகளுக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்யலாம்.

நீண்ட விடுப்பில் இருந்த ஊழியர்களின் விடுப்பு காலமானது ஊரடங்கு தொடங்கப்பட்ட பின், அதாவது 25.3.2020 அன்று முதல் விடுப்பு முடிவடைந்து அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாட்களாக கணக்கிடப்படும்.

ஊரடங்கிற்கு முன்னர் அலுவலகத்திலிருந்து விடுப்பில் சென்ற ஊழியர்கள், அறிவிக்கப்பட்ட பின்னர் பொது போக்குவரத்து இல்லாததால், அலுவலகத்திற்கு  வேலைக்கு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அவர்கள் ஊரடங்கிற்கு பின்னர் 23.3.2020 அன்று முதல் வேலைக்கு வந்ததாக கணக்கிடப்படும்.

அனுமதி வழங்கப்படாமல் விடுப்பு எடுத்துக் கொண்டால் அந்த விடுப்பு முடிந்த பின்னர் வரும் தேதியே, மீண்டும் அலுவலகத்தில் சேர்ந்த நாளாக கருதப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.