தொடரும் நற்செயல் .! 3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்ற சோனு சூட்.!

3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்று தத்தெடுத்து உதவிய சோனு சூட்டிற்கு

By ragi | Published: Aug 02, 2020 02:25 PM

3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்று தத்தெடுத்து உதவிய சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரீயல் ஹீரோவாக உள்ளார் நடிகர் சோனு சூட் . இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகிறது. தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து ஏர் உழும் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தும், ஊரடங்கால் வேலையிழந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது வேலை வாங்கி கொடுத்தும் உதவினார் .

இந்த நிலையில் தற்போது 3 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து உதவியுள்ளார். பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் ஆந்திராவின் புவனகிரியை சேர்ந்த 3 ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு சோனு சூட், இனி அவர்கள் ஆதரவற்றவர்கள் இல்லை, என் பொறுப்பில் இனி முதல் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். சோனு சூட்டின் தொடரும் நற்செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc