கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் கோலிசோடா பட இயக்குநர் .!

கோலிசோடா பட இயக்குநரான விஜய் மில்டன் அடுத்ததாக சிவா ராஜ்குமாரை

By ragi | Published: Jul 13, 2020 11:17 AM

கோலிசோடா பட இயக்குநரான விஜய் மில்டன் அடுத்ததாக சிவா ராஜ்குமாரை வைத்து கன்னட படத்தினை இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரியமுடன், காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பிரபலமானவர் விஜய் மில்டன். அது மட்டுமின்றி கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் மில்டன் அடுத்ததாக கன்னட படத்தினை இயக்கவுள்ளார்.

அந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவா ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார், இவர்களுடன் தனஞ்செயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை நேற்றைய சிவா ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தை விஜய் மில்டன் அவர்களின் ராப் நோட் புரொடக்ஷன்ஸ் மற்றும் கிருஷ்ணா சர்தக் தயாரிக்கிறது. மேலும் ஜே .அனூப் சீலின் இசையமைக்கவுள்ள இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc