கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை! மனிதர்கள் மீது சோதனையை மேற்கொண்டு வெற்றி பெற்ற முதல் நாடு இதுதான்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை! மனிதர்கள் மீது சோதனையை மேற்கொண்டு வெற்றி பெற்ற முதல் நாடு இதுதான்!

மனிதர்கள் மீது சோதனையை மேற்கொண்டு வெற்றி பெற்ற முதல் நாடு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலக அளவில்,  13,036,550 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 571,574 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பேரு போன்ற 5 நாடுகள் முதல் 5 இடத்தில் உள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், ரஷ்யா, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம், கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்த நிலையில், பல்கலைக்கழக இயக்குனர் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube