#BREAKING: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி ..!

பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.

பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத்,  பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தெலை ஏற்றுக்கொண்டார். இப்போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-14, 21-13 என்ற புள்ளி கணக்கில் டேனியல் பெத்தெலை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதனால், பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 வது தங்கத்தை தட்டி பறித்தது. இதற்கிடையில் மற்றோரு போட்டியில் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்றார்.  பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் அரைஇறுதியில் தோல்வியை தழுவிய நிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்க்கார், ஜப்பான் வீரர் டெய்சுகே புஜிஹாராவை எதிர்கொண்டார்.

இறுதியாக மனோஜ் சர்க்கார் ஜப்பான் வீரர் டெய்சுகே புஜிஹாராவை 22-20, 21-13  என்ற கணக்கில் வீழ்த்தி மனோஜ் சர்க்கா வெண்கலம் வென்றார். பாராஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. அதில், 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் வென்றுள்ளது.

author avatar
murugan