தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்தவாரம் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

(03.11.2023) இன்றைய நிலவரப்படி, நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.5 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரண் 45,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.77 ரூபாய்க்கும், 1 கிலோ ரூ.77,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

(02.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45560க்கும், கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,695க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு அதிகரித்து ரூ.77.70க்கும், கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.