தங்கம் விலை சரிந்தது…சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5.615ஆக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,066 ஆகி விற்பனை. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,528ஆக விற்பனையாகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.