மக்களே…. தங்கம் விலை சரிவு..! சவரனுக்கு ரூ.488 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து  ரூ. 35,520-க்கு விற்பனை. 

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து , ரூ.35,520-க்கும், கிராமுக்கு ரூ.61 குறைந்து, ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில், வெள்ளியின் விலை  கிராமுக்கு 1.50 காசுகள் குறைந்து ரூ.70.20-க்கு விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.