தங்கம் விலை சரிவு…சவரனுக்கு ரூபாய் 160 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்தது. இன்றும் சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனை. கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து 4,452 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 69,100-க்கு விற்பனை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.