இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று வரை அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று சற்று சரிந்த நிலையில், இன்று அதிரடியாக ரூ.360 சரிந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு தங்க நகைப் பிரியர்களுக்கு நகை வாங்க புதிய வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது.

சென்னையில் இன்று (04. 01. 2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது. நேற்று ரூ.47,320க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ரூ.46,960க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.5,870ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து ரூ.78ஆக விற்பனை ஆகிறது.

பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் நேற்று (03. 01. 2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 ரூபாய் குறைந்து ரூ.47,320க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ.5915க்கும் விற்பனையானது. அதேபோல்,  ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80க்கும் கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.