தங்கம் விலையில் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்குநாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம்  ரூ.3416-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.27,328-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,573-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,584-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500-க்கும் விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.