43,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!

43,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டேதான் வருகிறது, மேலும் கடந்த 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592க்கும், 4ம் தேதி ரூ.41,616க்கும் விற்கப்பட்டது. மேலும் இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்றது. இந்த விலை தங்க விலை வரலாற்றில் மிக அதிகப்பட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை 43 ரூபாய் உயர்ந்து 5,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 2.20 அதிகரித்து 83.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!