சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள தங்க நகைகளை கொண்டு கடன் பெற தேவசம்போர்டு முடிவு.?!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய முழுவதும் பல்வேறு பிரபல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பிரபல கோவில்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோவில் நிர்வாகம் திணறி வருகிறதாம்.

இதனை கருத்தில் கொண்டு, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய கோவில்களில் உள்ள தங்க ஆபரண நகைகளை வைத்து ரிசர்வ் பேங்க்கில் தங்க நகை கடன் பெற்று அதன் மூலம் அலுவல் பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாம்.

இதன்படி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.

ஏற்கனவே கேரள, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்து வந்ததால், அதனை சமாளிக்க அக்கோவிலில் உள்ள பயன்படுத்தப்படாத விளக்குகள், பாரம்பரிய பித்தளை பாத்திரங்களை விற்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டின் கீழ் கேர்ளாவில் சுமார் 1200 கோவில்கள் உள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.