கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க கோவை குற்றாலத்திற்கு செல்லுங்கள்

கோடைகாலம் என்றாலே நம்மால் வெப்பத்தை தாங்க  முடியாமல் பலரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் கோடைகாலம் என்றால் இன்னோரு புறம் சுற்றுலா கொண்டாட்டம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கோடைகாலத்தில் நாம் நம்முடைய வெப்பத்தை எந்த இடத்திற்கு சென்றால் தணித்து விடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

கோவைக்குற்றாலம்:

கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும்,விலங்குகளையும் ஒரே சமயத்தில் காண முடியும்.

கோவைக்குற்றாலம் சிறுவாணி அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையில் இருந்து 37 கிமீ தொலைவில் இந்த கோவைக்குற்றாலம் அமைந்துள்ளது.கோவைக்குற்றாலம் இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்ற ஒரு இடமாகும்.

வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக இடமாக இது விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் இந்த இடத்தில் மிகவும் கவனமாக குளிக்க வேண்டும்.

 

 

Leave a Comment