கோடையில் குடிப்பதற்கு ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம்

  • ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பலரும் பல வழிகளில் குளிர்ச்சியை தேடி ஓடுகின்றனர். கோடை காலங்களில் அதிகமாக குளிர்பானங்களை தான் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர்.

இந்த பானங்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். தற்போது ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தர்பூசணி (நறுக்கியது) – 4 கப்
  • கெட்டியான பால் – 3 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • பிரஷ் கிரீம் – 200 கிராம்
  • ரோஸ் எசன்ஸ் – 1/2 ஸ்பூன்

செய்முறை

தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வதற்கு  முதலில் பாலை நன்கு சுண்டைக் காச்சி வேண்டும். பின் அதனுள் சர்க்கரையை சேர்த்து கரைக்க வேண்டும். பின் பொடித்த தர்பூசணியை சேர்த்து மிக்சியில்  வேண்டும். பின் இதனுடன் பிரஷ் கிரீம் மற்றும் எசன்ஸ் சேர்க்க வேண்டும்.

Related image

இதனையடுத்து, இந்த கலவையை ஒரு அழுத்தமான அலுமினிய பாக்சில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின் 1 மணி நேரம் கழித்து எடுத்து மிக்சியில் அடித்து செட் செய்து எடுத்து, மீண்டும் அடித்து நல்ல ஐஸ் கிரீமாக செட் ஆனதும் எடுத்து பொடித்து தர்ப்பூசணியை அலங்கரித்து பரிமாறா வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment