உலகம் முழுவதும் முடங்கிய ஜி மெயில்..! தவிக்கும் பயனர்கள்.!

ஜிமெயில் கடந்த சில  மணிநேரமாக மெயில் அனுப்பவோ அல்லது  ஆவணங்களை இணைக்கவோ முடியவில்லை எனவும், இன்னும் சிலர் தங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது.

இதற்கிடையில், பயனர்கள் ஜிமெயிலில் வேலை செய்ய முடியாததால் ட்விட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து  வருகின்றனர். இதனால், #Gmail என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதுகுறித்து கூகிள் கூறுகையில்,  பயனர்கள் பிரச்சினையை ஒப்புக் கொண்டு “நாங்கள் தொடர்ந்து இந்த சிக்கலை விசாரித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் காலை நேரம் என்பதால் ஜிமெயில் பற்றிய புகார்கள் பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன.

author avatar
murugan