ஊழல் முடிவுக்கு வரவேண்டுமானால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான குஜராத்திற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்றுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு உள்ள ஆம் ஆத்மி கட்சி பெயரிடப்பட்ட சாலை கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்பு தெருவோரங்களில் இருந்த மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

அப்போது பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில்  இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. நான் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. பாஜக மற்றும் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமல்ல.

குஜராத்தையும், குஜராத் மக்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டுமானால் ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் ஒருமுறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் மற்ற கட்சிகளை எல்லாம் மறந்து விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க உதவும் உணவுகள் இதோ.!

Pregnancy food- கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கர்ப்பிணிகள்  முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக…

11 mins ago

நத்திங் கீழ் CMF வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலையில் எப்போது அறிமுகம்?

CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம்…

16 mins ago

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி…

26 mins ago

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் -…

36 mins ago

தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…

1 hour ago

அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.…

1 hour ago