இனி ரேஷன் கடைகளில் ஆவின்.. பால் உற்பத்தியாளர் வாரிசுக்கு பரிசு – அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் அறிவிப்பு.

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தமிழ்மொழி கல்வியில் 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பால் உரிமையாளர் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். பால் உற்பத்தியாளர்களின் அனைத்து வகை இறப்பிற்கும், இறுதி சடங்கிற்கென ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். சேலம் கருமந்துறையில் ரூ.6 கோடி செலவில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்