தீராத கண் திருஷ்டி விலக..!பொல்லாத பார்வையிலிருந்து விடுபட..!இந்த கயிற்றை கட்டிக்கொள்ளுங்கள்..!

தீராத கண் திருஷ்டி விலகுவதற்கு எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

சிலருக்கு கண் திருஷ்டி காரணமாக பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் சிலரது பார்வை ஒருசிலரின் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இருக்கும் பொல்லாத பார்வையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கருப்பு கயிறு அணியலாம்.

சிலர் கருப்பு கயிற்றினை கை, கணுக்கால், இடுப்பு அல்லது கழுத்தில் கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்படி அணிவதன் மூலமாக கண் திருஷ்டி நம்மிடம் இருந்து விலகும். பொதுவாகவே, கருப்பு நிறம் சுப நிகழ்ச்சிகளில் அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. பலரும் அந்த நிற உடையை அணிவதை தவிர்ப்பதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட இந்த கருப்பு நிற கயிற்றை மற்றவர் பார்வையில் படும்படி அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்குரிய நிறம்.

ஒவ்வொருவரும் அவரவர்களது வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமையை அடைவர். மனதில் இருக்க கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க இந்த கருப்பு கயிறு பயன்படுகிறது. இந்த கயிற்றை எப்படி அணிந்து கொள்ள வேண்டும், எப்போது அணிய வேண்டும் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். இதனை அணிவதற்கு முன்னர் சனீஸ்வர பகவானின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கட்டுவது சிறப்பாகும்.

மேலும், அணியும் பொழுது ஆஞ்சநேயர் மற்றும் துர்காதேவியை மனதார நினைத்து கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் கூறி அணிவதன் மூலமாக அந்த கயிற்றின் சக்தி அதிகரிக்கும். இந்த கயிற்றை சனிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணியளவில் கட்ட வேண்டும். காலில் அணிகிறீர்கள் என்றால் வலது புற கணுக்காலில் மட்டுமே அணிய வேண்டும். இவ்வாறு கட்டிக்கொள்ளும் இந்த கருப்பு கயிறு மூலமாக உங்களது மேல் படும் பொல்லாத பார்வை அனைத்தும் விலகி விடும். மேலும், இதனால் தொழிலிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.