திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் பொது தரிசனம்.!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் பொது தரிசனம்.

நேற்று முன் தினம் ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி நேற்று முன் தினம் ஒரு மணி நேரத்தில் 1800 க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர் கொரனோ வைரஸ் பரவலை தடுப்பதற்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக் கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேலும் ஒரு சில நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் அனுமதித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது , இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 3மணி சுப்ராபாதம் நடைபெற்றது தொடர்ந்து ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது என்ன பின்னர் காலை 5 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்த படி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர் அப்போதைய தீர்த்தம் சிறிய லட்டுகள் வழங்கப்படவில்லை .

கைகளைக் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு உண்டியல் காணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர் .மேலும் முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் 6000 பேர் நேற்று அனுமபதிக்கப்பட்டனர் , மேலும் இன்று திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்கள் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் நாளை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை விஐபி தரிசன முகம் பிறகு இலவச சர்வ தரிசனமும் தொடங்குகிறது . இதில் சமூக இடைவெளியை முககவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது , மேலும் தினமும் 200 பக்தர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்படும் இதில் யாருக்காவது இருந்தால் அவர்கள் உடனடியாக தேவஸ்தான சிம்மஸ் மருத்துவமனையில் அனுமதிப்பு எனவே அதற்கு மக்கள் தயாராக வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் தினமும் 3000 பேர் வரை வழங்கப்பட உள்ளது .18 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் விஷ்ணு நிவாசம் (8 மையங்கள்) ஸ்ரீநிவா சம் (6 மையம்), அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் (4 மையம்) ஆகிய இடங்களில் இலவச தரிசனம் டோக்கன்களை பெறலாம்.

இந்த டோக்கன்களை பக்தர்கள் நாள் ஒரு நாள் முன்னதாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தான விடுதிகளில் 2 பக்தர்களுக்கு ஒரு தங்கும் அறை வீதம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.