CBSE: பொதுத்தேர்வு 3,000 மையங்களுக்கு பதில் 15,000 மையங்களில் நடைபெறும்.!

நாடு முழுவதும் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 15,000 மையங்களில் நடைபெறும்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார். 

இதையடுத்து, சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும், வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படாது எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 1 – 15 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3,000 மையங்களுக்கு பதில் 15,000 மையங்களில் நடைபெறும் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்