9 ஆண்டுகளை கடந்த தளபதியின் வேலாயுதம்.!படம் குறித்த நெகிழ்ச்சி பதிவினை பகிர்ந்த இயக்குனர்..!

வேலாயுதம் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில் நெகிழ்ச்சி பதிவினை பதிவிட்டுள்ளார். 

கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம்.மோகன்ராஜா இயக்கிய இப்படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இன்றுடன் இந்த படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் குறித்து நெகிழ்ச்சி பதிவினை மோகன்ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் என் வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று வேலாயுதம் எனீறு என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த ஜெனிலியா அவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த படம் என்றும்,இந்த படத்தின் ஒரு பகுதியாக விஜய் உடன் இணைந்து, அவரது மகத்தான நடிப்பினை வியந்து பார்த்து, அவரது ரசிகர்களின் எல்லா அன்பையும் பெற்றது தனது அதிர்ஷ்டம். என்றும், இப்படத்தின் ஒரு பகுதியாக என்னை மாற்றிய மோகன்ராஜா அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.