சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

Ujjwala Yojana: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு மானியத்திற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

உஜ்வாலா யோஜனா பயனாளிக்கு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த திட்டமானது தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ. 12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Read More – என்னோட சீட்டு எங்கே..? விமானத்தில் தனது இருக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி

மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, இதற்காக அரசாங்கத்திற்கு கூடுதலாக ஆண்டிற்கு ரூ. 12,868.72 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment