Galaxy A05 & A05s : 50 எம்பி கேமரா..5,000 mAh பேட்டரி,! சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 & ஏ05s.!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05s என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்மார்ட்போனின் விலை உட்பட சில அம்சங்களும் அடங்கும். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒருசில அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ05

டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது 720 × 1600 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள எச்டிபிளஸ் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கலாம். இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

பிராசஸர்

இதில் மாலி ஜி52 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது சாதாரண பயன்பாடுகள் மற்றும் குறைவான கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களுக்கு அருமையாக இருக்கும். இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யூஐ 5.1 கோர் இருக்கலாம்.

கேமரா:

195 கிராம் எடை கொண்ட கேலக்ஸி ஏ05 பின்பிறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 வேரியண்ட்டுகளில் உள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது.

 

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் 

டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ05எஸ் ஆனது 1080 × 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இதிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ப்ளூடூத் 5.1 உள்ளது.

பிராசஸர்

194 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 610 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஓரளவு நல்ல கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடலாம். அதோடு ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது மென்மையாக இருக்கும். இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யூஐ 5.1 கோர் உள்ளது.

கேமரா:

கேலக்ஸி ஏ05எஸ் பின்பிறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்களும் உள்ளது.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் மற்றும் லாவெண்டர் பிங்க் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் உள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது.

விலை

விலையைப் பொறுத்தவரையில் கேலக்ஸி ஏ05 இன் விலை ரூ.13,000 க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல கேலக்ஸி ஏ05எஸ் இன் விலை ரூ.15,000 க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இரண்டு போன்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.