இன்று முதல் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி.!

கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திப்பதற்கான தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன.

அதன் படி, தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் அமர் நாத் குப்தா கூறுகையில், வாசல்களில் சுத்திகரிப்பான், வெப்பத் திரையிடல் மூலம் பயணிகளை சோதிக்கப்படு, சமூக இடைவெளி தூரத்தை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் உள்ளெ அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் 2,500 பார்வையாளர்கள் மட்டுமே கல்லறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலும், இது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.