இனி பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக்கவசம் கட்டாயம் – மாநகர போலீசார் அறிவிப்பு!

விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை.

கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாததால் ஒரே மாதத்தில் 85% உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என்றும் விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்