இவர்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்

6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். 

உச்சநீதிமன்றத்தில், ஜெயாதாகூர் என்பவர் 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சானிட்டரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற காரணங்களால் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலையம் ஏற்படுகிறது.

எனவே பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment