பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு – பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். மத்திய அரசு ஒப்புதலை அடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் பேசிய முதல்வர், தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில்  வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மீன்துறைக்கு ரூ.1,946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ.4.5 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment