மாணவர்கள் மற்றும் மக்களுக்கு இலவசமாக முக கவசம்! தையல் தொழிலாளி அசத்தல்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. இதனையடுத்து அரசாங்கம் இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

 இந்நிலையில்,  மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும்  கூறியுள்ளனர். இதனையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா தடுப்புக்காக, தையல் தொழிலாளியான ஆனந்த் தான் தயாரித்த 15,000 முக கவசங்களை பேருந்து நிலையத்தில், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், தையல் தொழிலாளி ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.