ராமர் கோயில் கட்ட நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டுகிறார்கள் – கர்நாடக முன்னாள் முதல்வர்!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதற்காக மிரட்டுகிறார்கள் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் திரட்டப்பட்டு வருகிறது. பல்வறு மதத்தவர்கள் சாதி, சமயம் பாராமல் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியைக் கொடுத்து வருகின்ற நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு மக்கள் மிரட்டப்படுவதாக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், ராமர் கோவில் கட்டுவதற்கு நான் நிதி கொடுக்கவில்லை என்பதற்காக எனது வீட்டிற்கு ஒரு பெண் உட்பட 3 பேர் வந்து மிரட்டினார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் முக்கியமான பிரச்சினை இது எனவும், ஆனால் ராமர் கோயில் கட்டுகிறோம் எனும் பெயரில் மற்றவர்களை அச்சுறுத்தி பணம் சேகரிக்கிறார்கள், அப்படி சேகரிக்கப்படும் பணத்தை நிர்வகிப்பது குறித்த வெளிப்படைத்தன்மை எங்கே எனவும் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
Rebekal