ஒரு பெண் பலி.! கூடலூரில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை அதிரடி உத்தரவு.!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை கொன்ற யானையை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு பெண்ணின் வீட்டில் மூன்று யானைகள் புகுந்த்து, இடத்தை சேதப்படுத்தி பின் அந்த பெண்ணையும் கொன்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராமத்து மக்கள் சாலையில் இறங்கி போராடினர்.

அந்த யானைகளை பிடிக்க உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை விடுத்து,  உடலை வாங்குவோம் என கூறியிருந்தனர். இதுவரை கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 வீடுகளை யானைகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தில் அந்த பகுதி வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்திருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று யானைகளை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment