செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் சீன நாட்டிற்குள் நுழைய அனுமதி.!

சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதி.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் சீனா சொல்லும் அளவிற்கு வெற்றியடைந்த நிலையில், நாட்டிற்கான நுழைவு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சீன குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 28 முதல் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலால் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து மார்ச் 28 க்குப் பிறகு மூன்று பிரிவுகளில் இருக்கும் விசாக்கள் காலாவதியான வெளிநாட்டினர்கள், காலாவதியான குடியிருப்பு அனுமதி மற்றும் ஆவணங்களை சீன தூதரகங்களில் கொடுத்து புதிய விசாக்களை விண்ணப்பிக்கலாம். இந்த நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு தனிப்படுத்துதல் அவசியம் என்றும் சீன விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெளிநாட்டினரின் நுழைவு மீண்டும் தடை ஏற்படாது என்று யாங் நம்புவதாக கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்