முதல்முறையாக டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் 6 மாவட்டங்களுக்கு பெண் டிசிபிகள்..!

டெல்லி தலைநகரில் 6 மாவட்டங்களுக்கு பெண் டிசிபிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி தலைநகரில் உள்ள 15 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களில் டெல்லி காவல்துறை இப்போது பெண் துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர். அவர்களில், மூன்று பேர் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவின்படி, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் 11 சிறப்பு போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 28 துணை போலீஸ் கமிஷனர்கள் மற்றும் கூடுதல் டிசிபிகளை இடமாற்றம் செய்தார். அந்த உத்தரவில் 2010-ஐபிஎஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர், தற்போது ஏழாவது பட்டாலியனின் டிசிபியாக பணியாற்றி வருகிறார். இவர் தெற்கு டிசிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

தலைமை அலுவலகத்தின் டிசிபியாக பணியாற்றும் ஸ்வேதா சவுகான் (2010), மத்திய டிசிபிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈஷா பாண்டே (2010), போலீஸ் கட்டுப்பாட்டு அறை டிசிபி, தென்கிழக்கு மாவட்ட டிசிபியாக மாற்றப்பட்டுள்ளார். உஷா ரங்நானி, பிரியங்கா காஷ்யப் மற்றும் ஊர்விஜா கோயல் ஆகிய மூன்று டிசிபிகள் ஏற்கனவே வட மேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan