கூகுள், அமேசான் நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறதா..?

மைக்ரோசாப்ட் நிறுவனம்  சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல். 

கடந்த சில மாதங்களாகவே கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதனை தொடர்ந்து, தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம்  சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாகவும், மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தரப்பில் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment