புத்த கயா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டணை..!

பீகார் மாநிலம் புத்த கயா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்குள்ள புகழ்பெற்ற புத்த கயாவில் 2013-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி 9 முறை குண்டுவெடித்ததில், 2 புத்த பிக்குகள் உள்ளிட்ட 5 பேர் காயமுற்றனர்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பால், உமர் சித்திக், அசாருதீன் குரேஷி, ஹைதர் அலி என்பவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாட்னாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா இன்று தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதன்பேரில், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment