தீ விபத்து.. 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மாநில முதலமைச்சர்!

இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அலட்சியம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தூரில் உள்ள ஸ்வர்ணா பாக் காலனியில் உள்ள இரட்டை மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, வீட்டின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என இந்தூர் போலீஸ் கமிஷனர் ஹரிநாராயண் சரி மிஸ்ரா தெரிவித்தார். இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ள நிலையில், 9 பேர் இதுவரை சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்