சீனாவில் வீடு சுத்தமாகவும், பாத்திரம் கழுவாமல் இருந்தால் அபராதம் ..!

சீனாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ளூர் மக்களிடையே சுகாதாரப் பழக்கங்களைத் கடைபிடிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தெற்கில் உள்ள புகே கவுண்டி மாவட்டத்தில் வீடு சுத்தமாகவும், பாத்திரம் கழுவாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், படுக்கையறை மற்றும் வீட்டு வேலை(சமையலறையை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுபவர்களுக்கு)  10 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 116 அபராதம் விதிக்கப்படும் எனவும்  சாப்பிடும் போது சுத்தமாக இல்லாதவர்களுக்கு 20 யுவான் அதாவது ரூ.233 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வீட்டு வளாகத்தில் குப்பை கொட்டாமலும், குப்பைகளை தெருக்களில்  வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி மீறினால் 30 யுவான் வரை  அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு மூலம் இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என்ற நோக்கத்துடன்  இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் அபராதம் இருமடங்காக உயர்த்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan