விஜய்யின் “தளபதி 66” படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது? – ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் தகவல்.

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  நெல்சன் திலிப்குமார், தற்போது தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஏற்படும் பட்சத்தில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையிட திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே,  பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ’தளபதி 66’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதைப்பற்றி வெளியாகவில்லை. இந்த நிலையில், ஊடகத்துக்கு பேட்டியளித்த தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தளபதி 66 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டியிருக்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும், கொரோனா பரவலை பொறுத்து படத்தை வருகின்ற தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், தளபதி 66 படத்தை குறித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

30 mins ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

50 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

1 hour ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

2 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

12 hours ago