500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.!

தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய  சட்டப்பேரவையில், 2 மணி நேரம் 7 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.

அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 150 ஏக்கரில் 500 கோடி ரூபாய் செலவில் சென்னை பூந்தமல்லிக்கு அருகே அதிநவீன திரைப்பட நகரம் உருவாக்கபட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி..

சென்னை பூந்தமல்லியில் அமைவுள்ள அதிநவீனத் திரைப்பட நகரத்தில், VFX, அனிமேஷன் (Animation)மற்றும் லெட் வால் (LED Wall) போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்றும், இதனை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment