Monday, June 3, 2024

செங்கோல் குறித்த புனைகதைகள் வரலாறு ஆகாது – ப.சிதம்பரம்

450 தொகுதிகளில் பொதுவான பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி களம் காணலாம் என ப.சிதம்பரம் பேட்டி. 

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 2024 மக்களவை தேர்தலில், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்தால், 450 தொகுதிகளில் பொதுவான பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி களம் காணலாம்; இது ஒரு விருப்பம்தான்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து பேசிய அவர்,  அன்று மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவிலேயே இல்லை. செங்கோல் தொடர்பாக பல புனைவுக்கதைகள் சொல்லப்படுகின்றன. 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை; அவர் பாகிஸ்தான் கராச்சியில் இருந்தார். புனைகதைகள் வரலாறு ஆகாது என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES