போராட்டத்திற்கு இடையில் மைதானத்தில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் ..!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் திக்ரி எல்லை ஆகியவை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குளிரின் மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் ஒரு மாதமாக சும்மா உட்கார்ந்திருப்பதால், வெங்காயத்தை நம் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். இதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மண்ணை தோண்டி வெங்காய பயிர்களை விதைத்து வருகின்றோம் என்று ஒரு விவசாயி கூறினார்.

மூன்று சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்கள் இடையே ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் போது எந்தவிதமான உடன்படும் எட்டப்படவில்லை. இந்நிலையில், டிசம்பர் 30 ம் தேதி அன்று  ஒரு டிராக்டர் அணிவகுப்பு மூலம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan