அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்.., ஆண்டவரா.? சிம்புவா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளால் பிரபலமான ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததுள்ளது. ஐந்தும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையில்,  பிக்பாஸ் அல்டிமேட் என்றொரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள்.
இந்நிகழ்ச்சி மூலம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார் .

இந்த நிலையில், எப்போது தான் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அதற்கான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம்.

இந்த நிகழ்ச்சியை 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment