#FACTCHECK: கோவேக்சின் & கோவிஷீல்டு விண்ணப்பம் நிராகரிப்பா..?

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்தியா, இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சார்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி 95 சதவிகிதம் பயன் தருவதாக  உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி 90 சதவிகிதம் பயன்தருவதாக தெரியவந்துள்ளது.

அஸ்ட்ரா ஜெனேகா உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை சீரம் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த பைசர் நிறுவனமும் , சீரம் நிறுவனமும்  இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்தது.

இந்நிலையில், பைசர் நிறுவனமும் , சீரம் நிறுவனமும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த செய்தி தவறான செய்தியான மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரியுள்ளது. இதுவரை 3 நிறுவனங்கள் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டுள்ளது. பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பிரிட்டன் மற்றும் பக்ரைன் நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan