பேஸ்புக்-வாட்ஸ்அப் சேவை முடக்கம்.., ரூ.52,217 கோடி இழந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் இறங்கி மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார்.

பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பாதிக்கப்பட்டன. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இது உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.52,217 கோடி குறைந்துள்ளது.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார். ஃபேஸ்புக்கின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 122 பில்லியன் டாலராக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலருடன் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தார்.

ஆனால் இப்போது அவர் மீண்டும் பில் கேட்ஸ் பின்னால் சென்றார். தற்போதுஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 124 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

author avatar
murugan