ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களைத் தவிர 4 ஜி மீதான தடையை நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் காண்டர்பால் மற்றும் உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி வரை விதிக்கப்பட்ட 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை மேலும்  நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த ரத்து செய்யப்பட்டதால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த  ஜனவரியில்  குறைந்த வேக 2 ஜி இணைய சேவை வழங்கப்பட்டது.

பின்னர், கடந்த ஆகஸ்ட் 15, அன்று உதம்பூர் மற்றும் காண்டர்பால் ஆகிய இடங்களில் 4 ஜி சேவை சோதனை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வழங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள காண்டர்பால் மற்றும் உதம்பூர் மாவட்டங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

author avatar
murugan