வெளியாவதற்கு முன்பே “கர்ணன்” படம் இத்தனை கோடி லாபமா..??

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படம் வெளியாவதற்கு முன்பே 25 கோடிக்கு மேல் லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக  ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படத்திற்கான டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வெளியாவதற்கு முன்பே 25 கோடிக்கு மேல் லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.