ரூ.13,000 கோடியில் EV பேட்டரி ஆலை..! டாடா குழுமம் ஒப்பந்தம்..!

டாடா குழுமம் சுமார் ரூ.13,000 முதலீட்டில் இவி(EV) பேட்டரி ஆலையை உருவாக்க உள்ளது.

நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதற்கு சமமாக அதிகரித்து வருகிறது. அத்தகைய மின்சார வாகனங்களின் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் அதன் பேட்டரிகள் ஆகும். இந்த பேட்டரிகளை உருவாக்க எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் என பல நிறுவனங்கள் உள்ளன.

Tata Motors
Tata Motors Image source The Economic Times

அந்த வரிசையில் டாடா குழுமத்தின் அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் சுமார் 1.58 பில்லியன் டாலர் (ரூ.13,000 கோடி) முதலீட்டில் லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், பங்குச்சந்தை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.3% உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.548.4ஐ எட்டியது.

EV battery plant
EV battery plant Image Source TwitterInfoGujarat

இந்த பேட்டரி ஆலை குஜராத் மாநிலத்தில் அமைய உள்ளது. குஜராத்தின் சனந்தில் அமைக்கப்படும் இந்த ஆலைக்கான பணிகள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையின் ஆரம்ப உற்பத்தி திறன் 20 ஜிகாவாட் (GWh) இருக்கும் எனவும், இது இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

EV Battery
EV Battery ET Image source EnergyWorld

மேலும், 2070-க்குள் இந்தியாவை கார்பன் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இருப்பினும், மின்சாரப் போக்குவரத்தை மேற்கொள்வதில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

Tata
Tata Image source Amarapalli1

சமீபத்தில், எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கான மானியத்தை (FAME II) அரசாங்கம் குறைத்ததன் விளைவாக, அனைத்து மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் மின்சார வாகனச்சந்தை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.