“இந்த பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்!”- தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.