சிறுமிகளின் ஆபாச படத்தை பகிந்த இன்ஜினியர் கைது..!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி ரவிக்குமார்  புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தர்மபுரி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து தர்மபுரி சைபர்கிரைம் எஸ்ஐ நவாஸ் தேசிய மையம் அனுப்பி இருந்த ஆவணங்களை வைத்த  அந்த வாலிபரின் ஐபியை வைத்து முகவரியை ஆய்வு செய்தனர்.

அந்த வாலிபர் தர்மபுரி அடுத்து உள்ள வெண்ணாம் பட்டியை சேர்ந்த சீனு(26). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்  குவாலிட்டி கண்ட்ரோலராக  வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து நண்பர்கள் அனுப்பியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் சீனுவை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை கைபற்றினர்.

author avatar
murugan